குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது, நாளைய தினம் நாடு முழுவதிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , நாளைய தினம் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்த சட்டத்தை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது