தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வீர வசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் கோவிலுக்குள் பொதுமக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை கொண்டுசெல்வதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2ம் திகதி ஏற்பட்ட தீவிபத்து 36 கடைகள் அழிவடைந்திருந்தன. இதனை அடுத்து கடைகளை அகற்றுமாறு கோவல் நிர்வாக்ம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கடைகளை அகற்றக்கூடாது எனத் தெரிவித்து கடை உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகிய போதும் கோவில் நிர்வாகம் தாங்கள் கடைகளை அகற்றவே விரும்புவதாகக் தெரிவித்ததனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை 12 மணிக்குள் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வீர வசந்தராயர் மண்படத்தில் உள்ள சுமார் 60 கடைகளில் தீ விபத்தால் எரிந்துபோன கடைகளைத் தவிர்த்த ஏனைய கடைகளின் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. கடைக்காரர்கள் தாங்களாகவே பொருட்களை அகற்றாத நிலையில், கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது