குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொலம்பியாவின் பார்க்( FARC) கிளர்ச்சியாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்க் கெரில்லாக்கள் அண்மையில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கொலம்பியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் பார்க் குழுவின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாறு போட்டியிடும் வேட்பாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தை குறித்த அமைப்பு நிறுத்திக் கொண்டுள்ளது. மிக நீண்ட காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்க் குழு, அண்மையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.