முன்னுரிமை வழங்கிய குற்றச்சாட்டின் பெரில் கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிகப் போட்டி ஒழுங்குமுறை ஆணையகம் 136 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அத்துடன் அறுபது நாட்களில் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் குறித்து பயனர்கள் கூகுளில் தேடும்போது அது தன்னிச்சையாக கூகுளின் விமானங்கள் குறித்த சேவைக்கு செல்வதாக இந்தியாவில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் வணிகப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தேடலில் மேற்கொண்ட பக்கச் சார்பின் காரணமாக அதன் போட்டி நிறுவனங்களுக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்திய கூகுள் நிறுவனம் அதன் போட்டியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக தனது 190 பக்க அறிக்கையில் சிசிஐ அமைப்பு விளக்கியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ‘பாரத் மேட்ரிமோனி டாட் காம்’ என்ற இணையதளமும், நுகர்வோர் பாதுகாப்பு குழுவொன்றும் பதிவு செய்த குற்றச்சாட்டின் மீது நடந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது