குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹொங்கொங்கில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இரட்டை தட்டு (double decker ) ரக பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குதிரைப் பந்தயம் ஒன்றை பார்வையிடுவதற்காக சென்ற பார்வையாளர்களையும், பணியாளர்களையும் அழைத்துச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமாக சென்ற பேருந்து குடைசாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.