Home இலங்கை மஹிந்தவை காப்பற்றியது TNA – ஒற்றையாட்சியின் பாதிப்பை வீடு வீடாக சென்று எடுத்துரைப்போம்…

மஹிந்தவை காப்பற்றியது TNA – ஒற்றையாட்சியின் பாதிப்பை வீடு வீடாக சென்று எடுத்துரைப்போம்…

by admin

ஒற்றையாட்சியின் பாதிப்பை வீடு வீடாக சென்று எடுத்துரைப்போம். – கஜேந்திரகுமார்.

ஒற்றையாட்சியின் பாதிப்பு குறித்து தமிழ் மக்களின் வீடு வீடாக சென்று எடுத்துரைக்க உள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  யாழில்.உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள்  இடைக்கால அறிக்கைக்கு ஆணை கேட்டே போட்டியிட்டார்கள். அதற்கு மக்கள் முழு ஆதரவை தெரிவிக்காத நிலையிலும்,  தலமைத்துவம் தொடர்ந்து ஒற்றையாட்சியை மக்கள் மத்தியில்  திணிக்கவுள்ளனர். அதனால் ஒற்றையாட்சியின் பாதிப்பை மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க உள்ளோம்.என மேலும் தெரிவித்தார்.

மஹிந்தவை காப்பற்றியவர்கள் கூட்டமைப்பினரே

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை காப்பற்றி விட்டவர்கள் தான் இன்று மஹிந்த வென்று விட்டார். நாம் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , தமிழ் மக்கள் கோரிய எதனையும் நல்லாட்சி என சொல்லப்படும் இந்த ஆட்சி செய்யவில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் கோரியதை செய்தால் மஹிந்த குழம்புவார். அதனால் தெற்கு குழப்பமடையும் என கூறினார்கள்.

நாம் மகிந்தவை சர்வதேசம் முன்பாக போர்க் குற்றவாளியாக முன்னிருந்த போராடி வந்த வேளை மகிந்தவை காப்பற்றும் முயற்சியில் கூட்டமைப்பினர் ஈடுபடனர் ஆனால் தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் தெற்கில் மஹிந்த பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.

அந்த நிலையில் அன்று மகிந்தவை காப்பற்றியவர்கள். இன்று மஹிந்த வென்றவுடன் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கோருகின்றனர். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More