163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் தோல்வியின் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தோல்வியை எதிர்நோக்கியிருந்தது. இந்த தோல்விக்கான முழுப் பொறுப்பினையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு விரைவில் சரியான சாதகமான பதிலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love