குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு சவாலையும் தாம் எதிர்நோக்கத் தயார் என கொழும்பு மேயராக தெரிவாகியுள்ள ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடும் போது ஏற்படும் சவால்கள் பற்றி மக்கள் பேசுவதாகவும் அந்த சவால்களை எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து கொழும்பை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் திட்டத்தை போன்று இது அமையாது எனவும் மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமது தொகுதியில் அதிகளவான சிங்கள மக்கள் இருந்த போதிலும் ஏனைய அனைத்து இன சமூகங்களுக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.