அயோத்தி விவகாரம் தொடர்பாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வரும் 20-ம் திகதி முஸ்லிம் மதத் தலைவர்களை மீண்டும் சந்தித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அயோத்தி விவகாரத்தில் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இதன் ஒரு பகுதியாக முஸ்லம் தலைவர்களை கடந்த 8ம் திகதி பெங்களூருவில் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது அயோத்தி விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை லக்னோவில் நடைபெறவுள்ளது
முதலாவது சந்திப்பில் பாபர் மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டது எனவும் இதற்கு பிரதிபலனாக வாரணாசி, மதுரா உட்பட பிரச்சினைக்குரிய 400 மசூதிகளுக்கு எதிரான போராட்டத்தை இந்து அமைப்புகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக சிஓஆர்டி அமைப்பின் இயக்குநர் அக்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுடன் பாபர் மசூதி இடிப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளர்h.