குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஜனாதிபதி அனுமதி வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கக் கூடாது என சுதந்திரக் கட்சியின் பத்து சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமையே கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணமேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென தெரிவித்துள்ளனர். இந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி சாதமாக செவிசாய்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.