154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவை ஆதரவு இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.
நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவை வெற்றியீட்டி நகரசபையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love