குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 13 வீதமாக வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், மற்றுமொரு தரப்பினர் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சொற்பளவிலான உறுப்பினர்களின் ஆதரவு அளித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.