குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -கொழும்பு…
பிரதமர் றணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு உள்ளன. இன்று இரவுப் பொழுதில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் அதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஐக்கியதேசியக் கட்சியின் தலைமையில் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் தனித்து ஆட்சி அமைக்கத் தீர்மானித்திருப்பதாகவும், அந்த அரசாங்கத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 16 அமைச்சர்கள் வரை இணையவுள்ளதாகவும், ஏனையோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இணையவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான சூழலில் றணில் விக்கிரமசிங்க தனது பிரமர் பொறுப்பில் இருந்து விலகி, சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதமர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளதாகவும், அதனை சிறிலங்காசுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கியதேசிய முன்னணியில் இணையவுள்ளவர்களும் ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, சுயமான முடிவுகளை எடுப்பதற்கு, பிரதமர் றணில் விக்கிரமசிங்கவை இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்தத் தகவல்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.