குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்காலத்தில் இருபதுக்கு இருபது போட்டிகள் மட்டுமே நடைபெறும் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் ஏனைய அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளும் வழக்கொழிந்து போகக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 15 முதல் 20 ஆண்டுகளில் உலகில் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகள் மட்டுமே நடைபெறக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். தற்காலத்தில் அனைவரும் அனைத்து விடயங்களையும் துரிதமாக நகர வேண்டுமென்றே விரும்புகின்றனர் எனவும் இதன் அடிப்படையில், இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளுக்கே அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.