எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமது கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் பிரதித் தலைவர் நா. திரவியம் தன்னுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு சகோதர இனத்தை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பொதுஜன பெரமுன கட்சி அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியதை பாராட்டி கிரானிலநடைபெற்ற பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி பாரிய வெற்றி பெறும் என கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே தான் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 ஆசனங்களை பெற்றுள்ளது எனவும் கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலத்துள் இதனைப் பெற்றது தனக்கு கிடைத்த வெற்றியாகும். எதிர்காலத்தில் சிறந்ததொரு அரசியல் காய் நகர்வை நகர்த்துவதற்குதிட்டமிட:டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.