ஊழல் புகாரில் சிக்கியுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா(Jacob Zuma) பதவி விலக ஆளும் கட்சி காலக்கெடு விதித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்துவரும்75 வயதான ஜேக்கப் ஷூமா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. ஆளும் கட்சியான ஏ.என்.சி (ANC) கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக உள்ளதனால் அவர் வாக்கெடுப்பில் ; தோல்வி அடையும் நிலை உள்ளது.
எனவே வாக்கெடுப்பிற்கு முன்னதாக பதவி விலகுமாறு கோரியும் அவர் பதவிவிலக மறுத்தமையினால் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் அவர் பதவி வரக வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது