196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புயல் காற்று தாக்கத்தினால் ரொங்கா (,Tonga)நாட்டு பாராளுமன்றிற்கு பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான புயல் காற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. கீட்டா என்னும் புயல் காற்றினால் ரொங்கா நாடு பாரியளவு சேதங்களை எதிர்நோக்கியுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புயல் காற்றினால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காற்று அனர்த்தம் காரணமாக பசுபிக் பிராந்திய வலய நாடான ரொங்காவில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love