குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் அரசாங்கம் கிளர்ச்சிக் குழுக்களுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் இவ்வாறு மியன்மார் அரசாங்கம் அதிகாரபூர்வமாக யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.
தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இவ்வாறு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதாக மியன்மாரின் தலைவி ஆன் சான் சூ கீ தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை ரோஹினிய முஸ்லிம்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற வன்முறைகளினால் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹினிய முஸலிம்கள், அண்டை நாடான பங்களாதேஸில் சரண் புகுந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது