153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். புதிதாக அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் இந்த அமைச்சர்கள் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
ஏனைய சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உத்தேசித்துள்ளனர். சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love