129
டென்மார்க் இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார் என அரச மாளிகை அறிவித்துள்ளது. டென்மார்க்கின் அரசியாக இருந்து வரும் மார்க்ரெட்டின் கணவராக இளவரசர் ஹென்றிக் விளங்குகின்றர்h. 83 வயதான ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளை கட்டி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கோபன்ஹேகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்என அரண்மனை தெரிவித்துள்ளது. இதையடுத்து, குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சென்றிருந்த டென்மார்க் பட்டத்து இளவரசரான பிரடெரிக் அவசரமாக நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love