இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூகு உயர்ந்த பரிசுகளை லஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிவித்து அவரை லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இணைக்குமாறு சட்டமாஅதிபரிடம் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
சுமார் 12 ஆண்டுகளாக பிரதமராக உள்ள பென்ஜமின் நெட்டன்யாகூகு 2.8 லட்சம் டொலர் மதிப்பிலான விலை உயர்ந்த அன்பளிப்புகளை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது. இஸ்ரேல் நாட்டை பொறுத்தமட்டில் காவல்துறையினரின் இதுபோன்ற பரிந்துரைக்காக அல்லது முறையாக தண்டிக்கப்பட்டாலோ தனது பதவியை விலக வேண்டும் என்பது கட்டாயமில்லை.
காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று நெட்டன்யாகூகு பெயரை லஞ்சக்குற்றச்சாட்டில் இணைப்பதா என்பது குறித்து தீhமானிக்க இன்றும் சல காலம் எடுக்கும். இதேவேளை தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தேர்தலில் போட்டியிட்டால் மீண்டும் தான்தான் பிரதமாதராக வருவேன் என பென்ஜமின் நெட்டன்யாகூகு தெரிவித்துள்ளர்,