குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தாம் நம்புவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரணிலின் ஒரு சொல்லை நம்புவேன். “ஆனால் மைத்திரி ஏழு ஆவணங்களில் கையொப்பமிட்டு உறுதியளித்த விடயங்களையும் நான் நம்பப் போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். எனவே சுதந்திரக்கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.