ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடகலந்து கொள்ளும் இவர்களுடன், நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் அதேவேளை வேறு வேறு அரசியல் கட்சிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று ( ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.