குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குறித்த காலக்கெடுவில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகளின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக அர்ஜூன் மகேந்திரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் இன்றைய தினம் வரையில் கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும், அர்ஜூன் மகேந்திரன் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அர்ஜூன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.