174
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முதுகில் குத்தப் போவதில்லை என சபாநாயகர் கரு ஜசூரிய தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் கட்சித் தலைவர் பதவியை மலினப்படுத்தும் நோக்கில் தாம் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் பற்றி பிழையான செய்திகளை ஊடகங்கள் பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவியை அபகரித்துக் கொள்ள விரும்பியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.கட்சியின் அனுமதியின்றி எந்தவொரு செயற்பாட்டையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் கரு ஜசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Spread the love