குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் தற்போது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டால் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசியல் சாசனத்தில் ஒர் சரத்து காணப்படுகின்றது எனவும் எனினும், தற்போது நாட்டில் தேசிய அரசாங்கமொன்று ஆட்சியில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் குறித்த இணக்கப்பாட்டு உடன்படிக்கையும் கலாவதியாகியுள்ளது எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்