குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சிரில் ரம்போசா தனது முதல் உரையில் உறுதியளித்துள்ளார். இதுவரை காலமும் பதவி வகித்து வந்த ஜெகோப் சூமா பதவிவிலகியதனைத் தொடர்ந்து, 65 வயதான சிரில் ரம்போசா இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினால் ரம்போசாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றில் ஜனாதிபதி வேட்பாளராக ரம்போசாவின் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி சூமா பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது