154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்னவிடம் இந்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், இருவருக்கும் பிணை வழங்கப்பட முடியாது என நீதவான் அறிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கசுன் பலிசேன மற்றும அர்ஜூன் அலோசியஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love