சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்களது பரீட்சைப் பயத்தை போக்கும் வகையில் புது டில்லியில் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற நிகழ்வில் வீடியோ கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே இந்தியப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நாட்டின் மிகவும் மிக தொன்மையான மொழி எது? என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி எனவும் உச்சரிப்பதற்கு மிகவும் அழகான மொழி தமிழ் எனவும் தெரிவித்தார்.
மேலும் அந்த மொழியில் என்னால் வணக்கம் மட்டும்தான் சொல்ல முடியும் எடினவும் அதற்கு மேல் பேச முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே முற்று முழுதாக இந்தி மொழியில் பிரதமர் மோடி பேசினார். மற்ற மொழியில் மாணவர்களிடம் பேச முடியாததற்காக அவர் மன்னிப்பு கோரினார். தனது பேச்சு மற்றும் விவாதங்கள் மாணவர்களுக்கு அவரவர் மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1 comment
Modi needs to say this is an accept fact by the whole world and he is only a politician but if can help to reveal the archaeology of Kumarikandam it will be very much appreciated by the whole world.