பரந்தன் நெல் ஆராய்ச்சி நியைத்தில் வயல்விழா ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. நிலையப் பொறுப்பதிகாரி பிரதிவிவசாயப் பணிப்பாளர் சோ..சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இவ் வயல் விழாவில் பேராதனை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விதை நடுகைப்பொருள் பணிப்பாளர், இரணைமடு மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி) மாவட்ட விவசாயப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், கமக்கார அமைப்புப் பிரடதிநிதிகள் விவசாயிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பெரும்போகத்தின் Nபுhது ஆராய்ச்சிக்காக செய்கை பண்ணப்பட்ட துண்டங்கள் பற்றி விளக்கப்பட்டதுடன் தற்போதைய ஆய்வு நடவடிக்கைகளான இனவிருத்தி செயற்பாட்டின் மூலம் பதிய நெல் விருத்தி, நஞ்;சற்ற முறையில் நெல் உற்பத்தி, புதிய பசளைப்பரிசோதனை, புதிய களைகொல்லி பரிசோதனை இயற்திர மயமாக்கலில்நாற்று நடும் கருவி, விதையிடு கருவி, கதிர்த் தொழிற்பாட்டு நில மட்டப்படுத்தும் கருவி என்பன குறித்தும் விளக்கப்பட்டது.