குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாட்டில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலைமைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளதாக, சுட்டிக்காட்டிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், இந்த நிலைமையான நல்லிணக்க முனைப்புக்களை பெரிதும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆட்சி மற்றும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ள அவர், விவசாயம், மதம், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.