அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரித்தானிய ராஜதந்திரிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை..
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நான்கு நாடுகளின் ராஜதந்திரிகள் தம்முடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் என்ன விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை. தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைக்கு காத்திரமான தீர்வுத்திட்டமொன்றை எட்டுமாறு பல நாடுகள் இலங்கையிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே வெளிநாடுகளின் பொதுவான நிலைப்பாடக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.