எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீரென பதவிவிலகியுள்ள நிலையில் அங்கு அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 மில்லியன் மக்கள் வாழும் எத்தியோப்பியாவின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்நாட்டின் வளர்ச்சி நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியானமுறையில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நேற்று முன்தினம் பதவிவிலகியிருந்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும்வரை ஐலிமரியாம் தேசாலென் பிரதமர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.