157
இந்த அரசாங்கம் தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு ஆட்சியில் இருக்கும் என்றே நான் நம்புகின்றேன். என வடமாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
கொள்கை அடிப்படையில் தமிழர்களின் விடிவுக்காக எமது பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும். தெற்கின் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் பிறநாடுகளின் உள்ளீடுகளும் இருப்பதாக தெரிகின்றது. அதனால் தற்போதுள்ள அரசாங்கம் பிளவு பட அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனும் தோற்றம் உள்ளது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அரசாங்கம் தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு ஆட்சியில் இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.
தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் கூடியளவில் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்கவும் உதவலாம். அல்லது தமிழ் மக்களை ஒதுக்கி வைக்கவும் முயலலாம். எந்த மாதிரியான நிலைப்பட்டை எடுக்க போகின்றார்கள் என்பது தெரியவில்லை. என தெரிவித்தார்.
Spread the love