173
தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பத்றகு எவ்வித முயற்சிக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கோ அல்லது வேண்டுமென்றே முடிவுகளை காலம் தாழ்த்தி வெளியிடுவதற்கோ முயற்சிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் காலம் தாழ்த்தப்பட்டமை குறித்து சமூக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love