189
கவுதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில் இப்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷூக்கு நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க தற்போது சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016 மார்ச்சில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார். இதற்கிடையே கவுதம் மேனன் அவரது கனவுப் படமான துருவ நட்சத்திரம் படத்தை இயக்க ஆரம்பித்தார். தனுஷூம் அடுத்ததாக வடசென்னை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு துவங்கி சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வந்தார் தனுஷ். பின்னர் மாரி-2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படும் அதேநேரத்தில் படத்தின் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தை மேமாதம் வெளியிட செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Spread the love