குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் பேசியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசுவதற்காக தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி, மஹிந்தவிற்கு அழைப்பு விடுது;துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தொலைபேசி சம்பாசனை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன என ஜனாதிபதி, மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் அதேவேளை பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கூறிய மஹிந்த பின்னர் சந்திப்பு நடத்துவோம் என தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.