மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் ஒருவர் சென்ற ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் காயமைந்த நிலையில் மருத்துவமனையிரல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிற்ற உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 7.2 அலகுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவரேட்டே மற்றும் மாநில ஆளுனர் ஆகியேர் சென்ற ஹெலிகொப்டரே இவ்வாறு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அமைச்சர் மற்றும் ஆளுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.