சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் மிகவும் பழமையான புராதன புத்தவிகாரை என யுனெஸ்கோ அறிவித்த ஜோஹாங் விகாரையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கௌதம புத்தர் தனது 12 வயதில் இருப்பது போன்ற சிலை உள்ளிட்ட பல விலைமதிப்பு மிக்க அரிய பொருட்களும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ததீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எவையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. திபெத்தின்; தலைநகர் லாசாவில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான இந்த பழமையான விகாரையை கடந்த 2000-ம் ஆண்டில் யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.