154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரேஸிலில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்று பத்து சிகப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டதனால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஹியா மாநில சம்பியன்ஸிப் போட்டித் தொடர் ஒன்றில் விக்டோரியா அணிக்கும் பஹியா கழகத்திற்கும் இடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
விக்டோரியா அணியின் மூன்று வீரர்களுக்கும், பஹியா அணியின்ஐந்து வீரர்களுக்கும் சிகப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டுள்ளன. பின்னர் மேலும் இரண்டு விக்டோரியா வீரர்களுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எட்டு பேருக்கு மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Spread the love