4 மணியில் இருந்து 7 மணிவரை நாடாளுமன்றத்தில் விஷேட விவாதம்
நாடாளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடடியது
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் தீர்க்கமானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்குப் பின்னரான அரசியல் ஸ்திரமற்ற நிலமைகளை அவதானிக்கின்ற போது, நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.