மேகாலயா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தீவிரவாதிகள் மேற்கொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயா மாநில சட்டசபைக்கு எதிர்வரும் 27ம்திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்றையதினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாதோன் என் சங்மா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவரது வாகனம் செல்லும் பாதையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை மேற்கொண்டுள்ளனர். இதில் ஜோனாதோன் என் சங்மா உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலாயாவின் மேற்கு பகுதியை பிரித்து காரோலாந்த் தனிநாடு கோரும் காரோ தேசிய விடுதலை ராணுவமே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது