ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் {ஹசேன் ஆகியோர் இலங்கை தொடர்பில் சில விடயங்களை முன்வைப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன் இலங்கை குறித்து பல்வேறு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இலங்கை தொடர்பான விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெ ளியிடவுள்ளதுடன் அதில் அவர் தனது அதிருப்தியை வெ ளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
செய்ட் அல் {ஹசேனின் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் சார்பில் அறிக்கையை முன்வைப்பார் என்பதுடன் இலங்கையானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் {ஹசேன் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளதுடன் பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது