குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றை கலைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் ஜனாதிபதி அரசாங்கத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியை தனிமைப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி விலகிக் கொள்வது முக்கியமானது என குறிப்பிட்டுள்ள வாசுதேவ அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான உரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.