குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாளைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலவி வரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் இயங்கினால் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சுத் துறைகளில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வறெனினும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.