177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரம் நிறுவப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை அரசாங்கங்களை அமைப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்களினால் அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அரசியல் தலைவர்கள் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிரூபிக்கத்தவறினால் நாட்டு மக்கள் பதற்றமடைவர்கள் என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love