அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் உள்நாட்டு தயாரிப்பான அக்னி ரக ஏவுகணைகள் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமைபெற்ற அக்னி-2 ஏவுகணை பரிசோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.
அக்னி-2 ரக ஏவுகணையானது அணு ஆயுதம் ஏந்தி செல்லும் ஆற்றல் பெற்றது எனவும் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தையும் இந்த ஏவுகணையால் தாக்கி தகர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 தொன் நிறை கொண்ட இந்த ஏவுகணை, 1000 கிலோ நிறையுடைய வெடிபொருட்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இலக்கை சரியாக தாக்கும் வகையில் நவீன துல்லிய வழிகாட்டுதல் அமைப்டன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது