அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை புளோரிடாவில் பாடசாலை ஒன்றில் அப்பாடசாலையின் முன்னாள் மாணவரான நிகோலஸ் க்ரூஸ் என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி; ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அடுத்து நாங்களா? என எழுதிய பதாகைகளுடன் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.