207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை என கட்டலோனிய அரசியல்வாதி அன்னா கப்ரியல் ( Anna Gabriel ) தெரிவித்துள்ளார். ஸ்பெய்னின் மட்ரீட்டில் அமைந்துள்ள நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அன்னாவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நியாயமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவே தாம் வழக்கு விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love