சிரியாவில் போராளிகளை குறிவைத்து அரசபடையினர் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 10 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் போராளிகள் பல இடங்களில் வீழ்ச்சியடைந்து வருகின்றனர் எனவும் இதனை சாதகமாகப் பயன்படுத்தி கூட்டுப்படையினர் கடுமையான வான்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கடந்த 48 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு சிரியாவில் இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.